கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 6:46 PM GMT (Updated: 27 Aug 2019 6:46 PM GMT)

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

கர்நாடகத்தில் நிலவிய குழப்பமான அரசியல் சூழ்நிலையில் அந்த மாநிலத்தின் சபாநாயகர் ரமேஷ்குமார் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவுக்கு எதிராக 17 பேரும் கூட்டாகவும், தனித்தனியாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று நீதிபதிகள் என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு பதிவாளர் மனுவை பரிசீலித்து பட்டியலிட்டபிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story