ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீர் பல்டி ஏன்?


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீர் பல்டி ஏன்?
x
தினத்தந்தி 28 Aug 2019 5:57 AM GMT (Updated: 28 Aug 2019 7:51 AM GMT)

ராகுல்காந்தியின் பேச்சுக்களை இந்தியா எதிர்ப்பு பிரசாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதனாலேயே ராகுல்காந்தி சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திடீர் அறிக்கை அளிக்கபட்டு உள்ளது.

புதுடெல்லி

அரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.  இந்திய அரசு சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவதாக கூறி  18 ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் ஆணையாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

அதில் ராகுல் காந்தியை மேற்கோள் காட்டும்  சில வரிகள் இடம்பெற்று உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் "மக்கள் இறப்பதை" குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல் காந்தி போன்ற முக்கிய அரசியல்வாதிகளால் அங்கு பிற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, இந்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில் "அங்கே மிகவும் வன்முறை  நடக்கிறது" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


ஜம்மு காஷ்மீர் சென்று வந்த பின் ராகுல்காந்தி தனது ட்விட்டரில்

ஜம்மு-காஷ்மீர் மக்கள் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டு 20 நாட்கள் ஆகின்றன.எதிர்க்கட்சி மற்றும் பத்திரிகைத் தலைவர்கள் நேற்று ஸ்ரீநகருக்குச் செல்ல முயன்றபோது ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது நிர்வாகத்தால் முரட்டு சக்தி கட்டவிழ்த்துவிடப்பட்டது என கூறி இருந்தார்.


பாலகோட் தாக்குதலின் போது புல்வாமா பதற்றத்திற்குப் பின்னர் கூட, ராகுல் காந்தியின் பேச்சுகள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ரேடியோ மற்றும் டிவிக்களால் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

உண்மையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பாலகோட் காங்கிரஸின் நிலைப்பாடு ஒரு பெரிய காரணம் என்று பலர் நம்புகிறார்கள். ஆகவே தான் காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி தரப்பில் அவசர அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

பல விவகாரங்களில் இந்த அரசாங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், இதை நான் முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன்: காஷ்மீர் என்பது இந்தியாவின் உள் நாட்டு பிரச்சினை மற்றும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை.

ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெறுகிறது. ஏனெனில் இது உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது என கூறி உள்ளார்.


Next Story