அரியானா சட்டசபை தேர்தல்: விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இடஒதுக்கீடு - தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி


அரியானா சட்டசபை தேர்தல்: விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இடஒதுக்கீடு - தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி
x
தினத்தந்தி 12 Oct 2019 3:45 AM IST (Updated: 12 Oct 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

சண்டிகார்,

அரியானா மாநில சட்டசபை தேர்தல், 21-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு,

விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குறிப்பிட்ட விவசாயிகளுக்கும், வீடுகளுக்கும் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, 1 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் பட்டியல் இன மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை,

பட்டியல் இன ஆணையம் அமைக்கப்படும், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு, அரியானா மாநில இளைஞர்களுக்கே ஒதுக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Next Story