டெல்லி விமான நிலையத்தில் ரூ.9.78 கோடி ஹெராயின் பறிமுதல்; 7 பேர் கைது


டெல்லி விமான நிலையத்தில் ரூ.9.78 கோடி ஹெராயின் பறிமுதல்; 7 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2019 11:52 AM GMT (Updated: 26 Nov 2019 11:52 AM GMT)

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.9.78 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்திய 7 ஆப்கானிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் நகரில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது.  இதில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 7 பேரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடந்த மருத்துவ பரிசோதனையில் 1.95 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் கொண்ட 214 கேப்சூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவற்றின் மதிப்பு ரூ.9.78 கோடி ஆகும்.

இவற்றை அவர்கள் விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர்.  இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் இதே முறையில் இந்தியாவுக்குள் ரூ.15 கோடி மதிப்புடைய ஹெராயின் போதை பொருளை கடத்த முயன்றதற்காக ஆப்கானிஸ்தானிய நாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story