தேசிய செய்திகள்

டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு + "||" + Foreign Ministers Conference in Delhi tomorrow: Thirteen countries, including Russia and Iran, participated

டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு

டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு
டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்க உள்ளன.
புதுடெல்லி,

டெல்லியில் வெளிநாட்டு மந்திரிகளின் மாநாடு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பூகோள ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.


இந்த மாநாட்டில் ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதவிர முன்னாள் பிரதமர்கள், சபாநாயகர்கள் என மொத்தம் 105 நாடுகளை சேர்ந்த 180 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய், சுவீடன், கனடா, டென்மார்க், நியூசிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளின் முன்னாள் பிரதமர்களும் இதில் பங்கேற்கிறார்கள். ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜவீது ஷரீப் இதில் கலந்து கொள்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு
இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.
3. புனேயில், நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை
புனேயில், நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.