விஜய் மல்லையா நாடு கடத்தல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


விஜய் மல்லையா நாடு கடத்தல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Nov 2020 2:16 AM GMT (Updated: 3 Nov 2020 2:16 AM GMT)

விஜய் மல்லையாவை ஒப்படைப்பதற்காக நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சில நடைமுறைகள் காரணமாக, அவர் இன்னும் நாடு கடத்தப்படவில்லை.

இதுபற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சில ரகசிய சட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்துவது சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 5-ந் தேதி மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story