வன்கொடுமை வழக்கு: ஆர்.எஸ்.பாரதியின் மேல்முறையீ்ட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


வன்கொடுமை வழக்கு: ஆர்.எஸ்.பாரதியின் மேல்முறையீ்ட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 11 March 2021 7:43 PM GMT (Updated: 11 March 2021 7:43 PM GMT)

தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 இதனையடுத்து கடந்த ஆண்டு (2020) மே மாதம் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்துசெய்ய மறுத்ததுடன், வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி விரைவாக தீர்வுகாண விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

 


Next Story