சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 April 2021 8:48 PM GMT (Updated: 15 April 2021 8:48 PM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது என்று ஜெயராஜின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி, 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கோரி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான மனுவை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரிஷிகேஷி ராய், சி.பி.ஐ. மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 8 பேரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது என தெரிவித்து மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story