உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க.


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 10:46 AM GMT (Updated: 20 Jan 2022 10:46 AM GMT)

உத்தரகாண்ட் சட்டசபையில் மொத்த உள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க. இன்று அறிவித்துள்ளது.

டேராடூன், 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகின்றன. மேலும்  தங்களது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ.க. தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில் பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதில் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பா.ஜ.க. மாநில தலைவர் மதன் கவுசிக் ஹரித்வார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமைச்சர்கள் சத்பால் மகராஜ், தான் சிங் ராவத் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.



Next Story