மராட்டியத்தில் திடீரென அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 722 பேருக்கு பாதிப்பு உறுதி.!


மராட்டியத்தில் திடீரென அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் 722 பேருக்கு பாதிப்பு உறுதி.!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 April 2023 6:49 PM GMT (Updated: 25 April 2023 6:56 PM GMT)

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் நேற்று புதிதாக 722பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5ஆயிரத்து 549 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் மேலும் 3 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்துள்ளனர். தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story