சத்தீஷ்காரில் குண்டு வெடித்து 3 போலீசார் படுகாயம்


சத்தீஷ்காரில் குண்டு வெடித்து 3 போலீசார் படுகாயம்
x

கோப்புப்படம்

சத்தீஷ்காரில் குண்டு வெடித்து 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் கான்கெர் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் போலீசார் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 போலீசார் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.


Next Story