கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு


கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2017 3:58 AM GMT (Updated: 21 Nov 2017 3:58 AM GMT)

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.


Next Story