தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை


தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 25 March 2018 1:29 AM GMT (Updated: 25 March 2018 1:29 AM GMT)

இலங்கை கடற்படையினர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றுள்ளனர். #TNFishermen #SriLankanNavy

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என கூறி அவர்களை விரட்டியடித்து உள்ளனர்.  மீனவர்களில் சிலரை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story