பல்லவன் விரைவு ரயில் திருச்சியில் தடம் புரண்டது


பல்லவன் விரைவு ரயில் திருச்சியில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 25 April 2018 2:47 AM GMT (Updated: 25 April 2018 2:47 AM GMT)

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சியில் தடம் புரண்டது.

திருச்சி,

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் என்ஜின் தடம் புரண்டது.

இன்று காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வரவேண்டிய பல்லவன் ரயில் கிராப்பட்டியில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். திருச்சி பொன்மலை அருகே கிராப்பட்டியில் பல்லவன் ரயிலின் என்ஜினை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரயில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story