நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிப்பு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2019 5:25 PM GMT (Updated: 27 Sep 2019 5:25 PM GMT)

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.


Next Story