மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு + "||" + Holidays for 12th class students across Tamil Nadu tomorrow - Government of Tamil Nadu announcement

தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. 

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 7-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால், நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்தது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 6,711- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. "தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது
தமிழக கடல் எல்லைகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 4,276 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.