மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு + "||" + Continuous rainfall in Kanyakumari Rising water level of dams

கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக அங்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள 5 முக்கிய அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
2. கேரளாவில் மழை: பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைப்பு - மந்திரி சிவன் குட்டி தகவல்
கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
3. பெலகாவியில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து 7 பேர் சாவு
பெலகாவியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
4. புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, மலைரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.