'ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது' - சீமான் பேட்டி
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேர்மையான அதிகாரியாக இருந்தவர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது, ஆனால் பா.ஜ.க.விற்கு தகுதி இருக்கிறதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ஆனால் கட்சி அதனால் வளரும் என்று சொல்ல முடியாது. ஊழலைப் பற்றியும், லஞ்சத்தைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்கு தகுதி உள்ளது. ஏனென்றால் அவர் நேர்மையான அதிகாரியாக இருந்தவர். ஆனால் பா.ஜ.க.விற்கு தகுதி இருக்கிறதா?" என்று சீமான் தெரிவித்தார்.
Related Tags :
Next Story