'போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது' - கனிமொழி


போதைப்பொருள் தடுப்புத்துறை மத்திய அரசிடம்தான் உள்ளது - கனிமொழி
x

போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.

கோவை,

போதைப்பொருள் தடுப்புத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார். கோவை மாவட்டம் அவினாசியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"போதைப்பொருள் தடுப்புத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது.

தொடர்ந்து பல மாநிலங்களில், குறிப்பாக குஜராத் துறைமுகத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. அந்த துறைமுகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதன் பிறகு விசாரணையில் என்ன நடந்தது? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது பற்றிய எந்த விவரமும் வெளியாகவில்லை. விசாரணை நடக்கிறதா என்பதே தெரியவில்லை."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.



Next Story