‘பயங்கரவாதம்’ பாகிஸ்தானுக்கு ஏதாவது புதிய விஷயத்தை செய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சி


‘பயங்கரவாதம்’ பாகிஸ்தானுக்கு ஏதாவது புதிய விஷயத்தை செய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சி
x
தினத்தந்தி 8 Jan 2018 9:49 AM GMT (Updated: 8 Jan 2018 10:06 AM GMT)

பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஏதாவது புதிய விஷயத்தை முன்னெடுக்க டொனால்டு டிரம்ப் நிர்வாகம் முயற்சிக்கிறது. #USFunds #Pakistan #Trump


 வாஷிங்டன்,
 
பாகிஸ்தான் பயங்கரவாதம் அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளையும் தாக்கும், இத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு புகலிடமாக மாறுவதை தடுக்க, வியூக அமைதியை பராமரித்தல் மற்ற்ம் ஊக்குவித்தலை தவிர்த்து பாகிஸ்தானுக்காக புதிய விஷயங்களை முன்னெடுக்க டொனால்டு டிரம்ப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது என டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரி கூறிஉள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 9/11 க்கு பின்னர் அமெரிக்காவில் நிர்வாகத்திற்கு வந்த அரசுக்களால் பாகிஸ்தான் விவகாரத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளால் எந்தஒரு பயனும் கிடையாது. 

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒதுக்கப்பட்ட நிதி உதவி அனைத்தும் வீணானது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பு புகலிடமாக பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா தன்னை முழுவீச்சில் ஈடுபடுத்தி உள்ளது என குறிப்பிட்டார். 
 
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெளிப்படையாகவே சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள், பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் இடையேயும் உறவுகள் இருந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் விவகாரத்தில் புதிய நடவடிக்கைய எடுக்கவேண்டிய நேரம் என உணர்கிறது. ஆப்கானிஸ்தானில் முன்னேற்றத்தை காண வேண்டும் என்றால் பயங்கரவாத சரணாலையங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. ஸ்திரமான ஆப்கானிஸ்தான் என்பதில் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். 
9/11 தாக்குதலில் வேர் இப்பகுதியில் (பாகிஸ்தானில்) இருந்தது தெரியும். ஆப்கானிஸ்தானில் பெருமளவு இரத்தம் சிந்தினோம். 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை உறுதிசெய்யும் பணியில் அமெரிக்காவை அர்ப்பணித்து உள்ளோம். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது எனவே அந்நாடுகள் பயங்கரவாத பாதுகாப்பு புகலிடமாக மாற அனுமதிக்க மாட்டோம் என டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரி கூறிஉள்ளார். 

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல்கட்டமாக அந்த நாட்டுக்கு வழங்கவிருந்த 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியது.

 இப்போது பாகிஸ்தானுக்கான ராணுவ நிதி உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா அதிரடியாக நிறுத்திவிட்டது.  2017 நிதி ஆண்டுக்கான கூட்டணி ஆதரவு நிதி 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இப்போதும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை எதிர்க்கொண்டு உள்ள பாகிஸ்தானில் கோபம் அதிகரித்து உள்ளது. இதற்கிடையே ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களான ஜமாத்-உத்-தாவா மற்றும் பலாக்-இ-இசானியாத் உள்பட 72 இயக்கங்கள் பொதுமக்களிடம் இருந்து நிதிஉதவி பெறுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்து உள்ளது. 

அமெரிக்காவின் கோபத்தை எதிர்க்கொள்ள வேண்டியது வரும் என சமாளிக்கும் விதமாக பாகிஸ்தான் நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், புதிய விஷயத்தை செய்யப்போவதாக டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அறிவித்து உள்ளது சற்று வியப்படைய செய்து உள்ளது.


Next Story