ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் சீக்கியர்கள் உள்பட 20 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் சீக்கியர்கள் உள்பட 20 பேர் பலி
x
தினத்தந்தி 1 July 2018 10:45 PM GMT (Updated: 1 July 2018 9:32 PM GMT)

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இங்கு ஒரு ஆஸ்பத்திரியை திறக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார்.

ஜலாலாபாத்,

அதிபர் அஸ்ரப் கனியை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்து இருந்தனர்.

திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடிப்பில் சீக்கியர்கள் உள்பட 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அதிபர் அஸ்ரப் கனி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story