எண்ணெய் கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயற்சி - ஈரான் குற்றச்சாட்டு


எண்ணெய் கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயற்சி - ஈரான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:15 PM GMT (Updated: 19 Aug 2019 8:14 PM GMT)

எண்ணெய் கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.


* சோமாலியாவின் தெற்கு பகுதியில் லோயர் ஷாபில்லே பிராந்தியத்தில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும் ராணுவத்தினர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* சூடானில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் உமர் அல் பாஷீர் ஊழல் வழக்கு விசாரணைக்காக நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

* கென்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள ருபுரிசி நகருக்கு அருகே சரக்கு லாரியின் மீது மோதியது. இதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

* சிறைபிடிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு உட்பட்ட பிராந்தியமான ஜிப்ரல்டாரில் இருந்து ஈரானின் எண்ணெய் கப்பல் மத்திய தரைக்கடல் நோக்கி புறப்பட்டது. இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட தங்களது கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.

* துருக்கியில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களை சேர்ந்த எதிர்க்கட்சி மேயர்கள் 3 பேரை ராணுவம் கைது செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story