737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு - போயிங் நிறுவனம் அறிவிப்பு


737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு - போயிங் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 1:42 PM GMT (Updated: 24 Sep 2019 1:42 PM GMT)

737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்கள், எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளாகின. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதனை தொடர்ந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்காகவும் சுமார் 350 கோடி ரூபாயை போயிங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஒதுக்கியுள்ளது . அந்த தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Next Story