உலக செய்திகள்

ரஷியாவில் சோகம்: வெந்நீர் குழாயில் விழுந்த கார் - 2 பேர் உடல் வெந்து சாவு + "||" + Tragedy in Russia: Car falls into a hot water pipe - 2 people die

ரஷியாவில் சோகம்: வெந்நீர் குழாயில் விழுந்த கார் - 2 பேர் உடல் வெந்து சாவு

ரஷியாவில் சோகம்: வெந்நீர் குழாயில் விழுந்த கார் - 2 பேர் உடல் வெந்து சாவு
ரஷியாவில் வெந்நீர் குழாயில் கார் ஒன்று விழுந்தது. இதில் இருந்த 2 பேர் உடல் வெந்து உயிரிழந்தனர்.
மாஸ்கோ,

ரஷியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பென்ஷா நகரில் தற்போது கடுங்குளிர் காலம் ஆகும். இந்த காலத்தில் குளிரை சமாளிக்க குழாய் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுவது வழக்கம். இதற்காக சாலைகளுக்கு அடியில் ராட்சத குழாய்களை பதித்து, அதன் மூலம் வீடுகளுக்கு வெந்நீர் சப்ளை செய்யப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் பென்ஷா நகரில் உள்ள ஒரு சாலையில் 2 ஆண்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த கார் பள்ளத்துக்குள் விழுந்தது. விழுந்த வேகத்தில் கார் சாலைக்கு அடியில் உள்ள வெந்நீர் குழாயை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது.

இதில் காருக்குள் இருந்த 2 பேரும் உடல் வெந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, கிரேன் உதவி மூலம் வெந்நீர் குழாய்க்குள் விழுந்த கார் தூக்கப்பட்டு, 2 பேரின் உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல் அடையாளம் காணமுடியாத வகையில் வெந்துபோய் இருந்தது.

வெந்நீர் குழாயில் இருந்து வெளியான அதிக வெப்பம் காரணமாக தார் சாலை உருகி பள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
2. போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி
போதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி
3. சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.
4. ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை - 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது
ரஷிய நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது.
5. ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது - விமானி உடல் கருகி சாவு
ரஷியாவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானி உடல் கருகி உயிரிழந்தார்.