உலக செய்திகள்

சீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன்; ஆச்சரியத்தில் உறைந்த மக்கள் + "||" + Miracle in China: 3 sun at one time; People frozen in surprise

சீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன்; ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்

சீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன்; ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்
சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன் தெரிந்ததால் அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
பீஜிங்,

சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தில் உறைந்தனர்.


சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது போன்ற நிகழ்வு பனிப்பிரதேசத்தில்தான் தெரியும். இந்த முறை பனிப்பொழிவு குறைந்த ஜின்ஜியாங் மாகாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது அதிசயம்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நடந்த இந்த அரிய அதிசய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டும் சீனாவில் உள்ள ஹெய்லாங்சியாங் மாகாணத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. இதனை இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என்று சீன மக்கள் வர்ணிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு
சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன
2. ஜின்ஜியாங்கில் சீனா 400 தடுப்பு முகாம்களைக் கட்டி உள்ளது - ஆய்வில் தகவல்
ஜின்ஜியாங்கில் சீனா 400 தடுப்பு முகாம்களைக் கட்டி உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
4. “சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது” - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
5. கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - டொனால்டு டிரம்ப்
கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.