சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து 4 பேர் பலி


சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து 4 பேர் பலி
x
தினத்தந்தி 21 Dec 2019 8:58 PM GMT (Updated: 21 Dec 2019 8:58 PM GMT)

சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.

பீஜிங்,

சீனாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அங்குள்ள ஆறு, அருவிகள் உறைந்து பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன.

இந்தநிலையில் வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள டோங்குவாவில் ஆற்று பாலத்தின் மீது அமைந்துள்ள தண்டவாளத்தில் ஒரே பெட்டியுடன் கூடிய ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் பெட்டி தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது.

அந்த ரெயிலில் பயணம் செய்த 35 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story