இந்தோனேசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி


இந்தோனேசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2020 10:45 PM GMT (Updated: 26 Feb 2020 10:45 PM GMT)

இந்தோனேசியாவில் கனமழையல் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஜகார்த்தா மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 பேர் மாயமாகி உள்ளனர். மழை வெள்ளத்தால் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

Next Story