உலக செய்திகள்

சிரியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல்: 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலி + "||" + Air strikes on schools and hospitals in Syria: 20 killed including 9 children

சிரியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல்: 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலி

சிரியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல்: 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலி
சிரியாவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில், 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாயினர்.
டமாஸ்கஸ்,

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் சிரிய அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பு மோதலில் அப்பாவி மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வரும் இந்த மோதலில் நூற்றுக்கணக்கானஅப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிர் பிழைப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர்.


கடந்த திங்கட்கிழமை அரசு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதலில் ஒரே நாளில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அரசு படை வசம் இருந்த ஒரு முக்கிய நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி தரும் விதமாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் நேற்று முன்தினம் சிரிய ராணுவம் வான்தாக்குதலை நடத்தியது. கிளர்ச்சியாளர்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் பதுங்கியிருக்கலாம் என சிரிய ராணுவம் நம்புவதால் அவற்றை குறிவைத்து இந்த வான்தாக்குதல் நடத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மற்றும் ஒரு ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 9 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்தனர்; கர்ப்பிணி தற்கொலை; கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. சிரியாவில் இஸ்ரேல் வான் தாக்குதலில் 23 பேர் பலி
அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் மேற்கூறிய நகரங்களில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 14 பேர் பலியாகினர்.
4. தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு இப்போது இல்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.