டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு


டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 15 March 2020 8:48 PM GMT (Updated: 15 March 2020 8:48 PM GMT)

டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.

லண்டன்,

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க சர்வதேச ரீதியில் ஒத்துழைப்பு நிலவ வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடந்த தாக்குதல் பற்றியும் விவாதித்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு அளிக்க உறுதி மேற்கொண்டனர்.

Next Story