சீனா மீது எனக்கு சிறிய வருத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்


சீனா மீது எனக்கு  சிறிய வருத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 23 March 2020 8:25 AM GMT (Updated: 23 March 2020 8:26 AM GMT)

சீனா மீது எனக்கு சிறிய வருத்தம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் உருவாகி, பரவி வருவதற்கு சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று சாடினார்.

 ஆனால் அதற்கு பதிலடி கொடுத்த சீனா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தை அமெரிக்க தரப்பில் சிலர் களங்கப்படுத்த முயற்சிப்பதாக கூறியது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது தனக்கு வருத்தம் இருப்பதாக டிரம்ப் மீண்டும் சீனாவை சீண்டியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “சீனா மீது எனக்குச் சிறிய வருத்தம் உள்ளது. நான் உண்மையாக இருக்கிறேன். நான் சீனாவை மதிக்கிறேன். 

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மதிக்கிறேன். ஆனால், கொரோனா விவகாரத்தில் அவர்கள் மீது எனக்கு வருத்தம்தான். எங்களிடம் அது குறித்து அவர்கள் தகவல்களைப் பரிமாறியிருக்க வேண்டும்” என்றார். 

Next Story