உலக செய்திகள்

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது + "||" + Pakistan missile test failed

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
இஸ்லாமாபாத்,

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம்டாக்டர் உள்பட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 750-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு போராடி வருகிறது.


இந்த இக்கட்டான சூழ் நிலையில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. 750 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘பாபூர்-2’ என்ற ஏவுகணை பாகிஸ்தான் சோதித்தது.

எனினும் இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் ஏவப்பட்ட ‘பாபூர்-2’ ஏவுகணை 14 கி.மீ. தொலைவிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது.

‘பாபூர்-2’ ஏவுகணையை சோதிக்கும் முயற்சியில் பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். முன்னதாக கடந்த 14-ந்தேதி இதே பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து ‘பாபூர்-2’ ஏவுகணை ஏவப்பட்டதும், புறப்பட்ட 2 நிமிடத்திலேயே அது தரையில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
3. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
5. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.