இங்கிலாந்தில் புதிதாக 25,308 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,725 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2021 1:52 AM GMT (Updated: 28 Jan 2021 1:52 AM GMT)

இங்கிலாந்தில் நேற்று புதிதாக 25,308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில்தான் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்று புதிதாக 25,308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 37,15,054 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்பால் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 1,725 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,01,887 ஆக அதிகரித்துள்ளது.   

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

Next Story