பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு


பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 Feb 2024 10:01 PM GMT (Updated: 1 March 2024 12:23 PM GMT)

பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். அப்போது பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ வீரரும் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story