சோமாலியாவில் அதிரடி தாக்குதல்: 19 பயங்கரவாதிகளை கொன்ற ராணுவம்


சோமாலியாவில் அதிரடி தாக்குதல்: 19 பயங்கரவாதிகளை கொன்ற ராணுவம்
x

கோப்புப்படம்

சோமாலியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் 19 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் கொன்றது.

மொகதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த அல்-சதாப் பயங்கரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த நாட்டில் இயங்கி வரும் ஓட்டல்கள், சோதனைச்சாவடிகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர் பலர் உயிரிழந்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக கருதப்படும் சோமாலியாவில் அரங்கேறும் இந்த செயல்களால் வெளிநாட்டினர் அங்கு செல்ல அச்சப்படுகிறார்கள். இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்து வருகிறது. இந்தநிலையில் தெற்கு சோமாலியாவின் சாபேலே பகுதியில் அல்-சதாப் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் நவீன ஆயுதங்கள், டாங்கிகளை கைப்பற்றி அழித்தனர். இந்த அதிரடி நடவடிக்கையில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.


Next Story
  • chat