இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிவந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல்


இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிவந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல்
x

செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

செங்கடல் வழியாக இந்தியாவுக்கு சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மற்றும் நார்வேக்கு வேதிப்பொருட்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த கப்பல் மீது இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து செங்கடல் பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர்கப்பல் பாதுகாப்புப்பணிக்காக விரைந்தது.

அதேவேளை, சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது நேற்று மாலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு இந்திய கடற்படை போர் கப்பல்கள் விரைந்து சென்றன.

இந்த டிரோன் தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இதன் காரணமாக செங்கடல், இந்தியப்பெருங்கடல், மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story