இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 27 March 2024 1:14 AM GMT (Updated: 27 March 2024 2:33 AM GMT)

கடக ராசிக்காரர்களுக்கு வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 14-ந்தேதி புதன்கிழமை.

திதி: துவிதியை திதி மாலை(4.19)க்கு மேல் திருதியை திதி.

நட்சத்திரம்: சித்திரை நட்சத்திரம் பகல்(3.29)க்கு மேல் சுவாதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம், சமநோக்குநாள். முகூர்த்தநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் பட்டாபிஷேகம். திருவெள்ளரை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். சோளிங்கர் நரசிம்மருக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: யோகமான நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச்செய்தி உண்டு.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி திரும்.

கடகம்: பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேசப் பயணம் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

கன்னி: விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இட மாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்: காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.

விருச்சிகம்: ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

தனுசு: வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்: பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்கும் எண்ணம் உருவாகும்.

கும்பம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று ஏற்படும்.

மீனம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணத்தை போராடி வாங்கும் நிலை உருவாகும். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: மீனம்.


Next Story