இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மறைச் சிந்தனைகளால் நினைத்தது நிறைவேறும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: திருதியை திதி மாலை(5.26)க்கு மேல் சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: சுவாதி நட்சத்திரம் மாலை (5.10)க்கு மேல் விசாகம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் மாலை(5.10)க்கு மேல் சித்தயோகம். சமநோக்குநாள். கரிநாள்.

சூலம்: தெற்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இன்றைய தினப்பலன்:

மேஷம்: அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்: வருமானம் திருப்தி தரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மிதுனம்: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.

கடகம்: நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராக செலவிடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும்.

கன்னி: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்: வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர், தொழில் ரீதியாகச் செய்த புது முயற்சி வெற்றி பெறும். இடம், பூமி வாங்கத் தீட்டிய திட்டம் நிறைவேறலாம்.

விருச்சிகம்: மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.

தனுசு: செய்தொழிலில் சீரான லாபம் கிடைக்கும் நாள். திருமண முயற்சி கைகூடும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக அமையும். உத்தியோக அனுகூலம் உண்டு. சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்: எதிரிகள் விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்: விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். மனக்குழப்பம் அகலும். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். வியாபார விரோதங்கள் விலகும்.

மீனம்: பிறருக்கு பொறுப்பு சொல்வ|தன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். வீண் வம்பு வீடுதேடி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிலில் தேக்க நிலை உருவாகும்.

சந்திராஷ்டமம்: மீனம்.


Next Story