இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கன்னி ராசிக்காரர்களுக்கு கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 31-ந்தேதி சனிக்கிழமை.
திதி: பஞ்சமி திதி மாலை(4.57)க்கு மேல் சஷ்டி திதி.
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நட்சத்திரம் பின்இரவு (5.17)க்கு மேல் திருவாதிரை நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: மாலை 1.30 மணி முதல் 3.00 மணி வரை
நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய தினப்பலன்:
மேஷம்: அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
ரிஷபம்: சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுலகப்பணிகள் துரிதமாக நடைபெறும்.
மிதுனம்: உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக் கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகள் தீரும்.
கடகம்: யோகமான நாள். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நண்பர்களால் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும்.
சிம்மம்: பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு.
கன்னி: அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும், தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சகோதரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
துலாம்: வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.
விருச்சிகம்: மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் வழியில் செலவுகள் ஏற்படும்.
தனுசு: புதிய பாதை புலப்படும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
மகரம்: வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கும்பம்: பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
மீனம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும். தொழில் சீராக நடைபெறும்.
சந்திராஷ்டமம்: மாலை 5.12 வரை துலாம்; பிறகு விருச்சிகம்.