இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் சித்திரை மாதம் 6-ந்தேதி வெள்ளிக்கிழமை.
திதி: ஏகாதசி திதி இரவு(10.25)க்கு மேல் துவாதசி திதி.
நட்சத்திரம்: மகம் நட்சத்திரம் பகல் (1.14)க்கு மேல் பூரம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள்
சூலம்: மேற்கு
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்:
வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள். மதுரை மீனாட்சி-சொக்கநாதர் பட்டாபிஷேகம். சமயபுரம் மாரியம்மன் தெப்பம். சீர்காழி சிவன் திருக்கல்யாணம். திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்.
ராசிப்பலன்:
மேஷம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நாட்டுப்பற்றுமிக்க வர்களால் நன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு இருமடங்காகும். இல்லத்தில் மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
மிதுனம்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில்தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும்.
கடகம்
கண்ணும் கருத்துமாகச்செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். விரயம் ஏற்படலாம்.
சிம்மம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதி களால் அனுகூலம் உண்டு. எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்
கன்னி
இல்லத்தில் நல்ல காரியங் கள் நடைபெறும் நாள். தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர் கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உத்தியோகத்தில் கிடைக்கும்.
துலாம்
வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுசகூலம் ஏற்படும். உடன்பிறப்பு கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
விருச்சிகம்
தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொகை வருவதற்கு வழிவகுக்கும்.
தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லையுண்டு. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் தொல்லை உண்டு.
மகரம்
ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம்
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருந்து விலக நேரிடும். சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.
மீனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும்.