இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

திருத்தணி சிவன் தேரோட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 7-ந்தேதி சனிக்கிழமை.

திதி: துவாதசி திதி இரவு (12.27)க்கு மேல் திரயோதசி திதி .

நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் பகல் (3.47)க்கு மேல் உத்திரம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் பகல் (3.47)க்கு மேல் மரணயோகம். கீழ்நோக்குநாள்

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருத்தணி சிவன் தேரோட்டம். தூத்துக்குடி நடராஜர் பச்சை சாற்றி பவனி. மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளிய காட்சி.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திறமைமிக்கவர்களின் ஒத்துழைப்போடு திடீர் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

மிதுனம்

நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்வர்.

கடகம்

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

கன்னி

யோகமான நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கும்.

துலாம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வரலாம். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும்.

விருச்சிகம்

முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

தனுசு

யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளைக் கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

மகரம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்புக் குறையும். ஆரோக்கியத் தொல்லையுண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதார்கள் தொல்லை தருவர்.

கும்பம்

விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்.

மீனம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு. உத்தியோக உயர்வு போன்றவைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: இரவு 10.26 வரை மகரம், பிறகு கும்பம்


Next Story