இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம்.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.

திதி: திரயோதசி திதி இரவு (2.27)க்கு மேல் சதுர்த்தசி திதி .

நட்சத்திரம்: உத்திரம் நட்சத்திரம் இரவு (6.21)க்கு மேல் அஸ்தம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம். மேல்நோக்குநாள்

சூலம்: மேற்கு

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம்.திருவள்ளூர் வீரராகவர் தேர். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பவனி.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

அமைதி கிடைக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.

ரிஷபம்

தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மிதுனம்

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட கடன்கள் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சினைகளிலிருந்து விடுபட வைக்கும்.

கடகம்

யோகமான நாள். உடல்நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக விளங்குவர். வருமானம் திருப்தி தரும்

சிம்மம்

போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கன்னி

சுறுசுறுப்பாக செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

துலாம்

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களைவாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம்

நலங்கள் வந்துசேர நந்தீஸ்வரரை வழிபட வேண்டிய நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். கடல் தாண்டிவரும் செய்தி ஆதாயம் தரும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று தொடரும்.

தனுசு

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

மகரம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கும்பம்

காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மீனம்

சிவதூதனை வழிபட்டு செயல்பாட்டில் வெற்றி காண வேண்டிய நாள். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு புகழைக் கூட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: கும்பம்


Next Story