இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மதுரை கூடலழகர் அலங்கார திருமஞ்சன சேவை. பைரவரை வழிபட நல்லது நடக்கும்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 13-ந் தேதி சனிக்கிழமை

திதி: துவிதியை திதி இரவு(1.59)க்கு மேல் திருதியை திதி.

நட்ச்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் பகல்(12,48)க்கு மேல் மகம் நட்சத்திரம்.

யோகம்: மரணயோகம் பகல் (12.48)க்கு மேல் அமிர்தயோகம்.

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

நெல்லை நெல்லையப்பர் தெப்ப உற்சவம். திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம். மதுரை கூடலழகர் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெர்மாள் திருமஞ்சன சேவை. பைரவரை வழிபட நல்லது நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் உற்சவம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் வாயில்தேடி வரும். தாய்வழி ஆதரவு உண்டு.

ரிஷபம்: புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். உறவினர்களை காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.

மிதுனம்: ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும், அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். வருமானம் திருப்தி தரும்.

கடகம்: வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.

சிம்மம்: நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாகனயோகம் உண்டு.

கன்னி: செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும்.

துலாம்: யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வரவு திருப்தி தரும். வீடு வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். பயணம் பலன் தரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

தனுசு: விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். குடும்பச்சுமையால் கையிருப்பு கரைய நேரிடும்.

மகரம்: மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். திடீர் விரயத்தால் சிந்தனைகள் மாறும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் மாற்றமுண்டு.

கும்பம்: பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

மீனம்: தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தூரதேசத்திலிருந்து அனுகூலச்செய்தி வந்து சேரும். கூட்டாளிகளல் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும், இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சந்திராஷ்டமம்: பகல் 12.48 வரை தனுசு; பிறகு மகரம்.


Next Story