விஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்

மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று விஷால் தன்னுடைய சண்டக்கோழி பட படப்பிடிப்பை கூட நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்துள்ளார்.

Update: 2017-10-13 10:09 GMT
சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் சங்க பொதுசெயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்  சந்திதது பேசினார்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்   கூறியதாவது:-

அரசு விதித்த கட்டணத்தை தாண்டி ஒரு ரூபாய் கூட எந்த திரையரங்குகளிலும் வசூலிக்கப்படாது. அரசு விதித்த கட்டணத்திற்கு மேல் வசூலித்தால் புகார் அளிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பொதுமக்கள் யாரும் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.

பிறமொழி படங்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம். திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 2% குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திரையரங்களில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக போகும் பிரம்மாண்ட படம் மெர்சல். விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் படத்தின் டீசர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் கடந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று விஷால் தன்னுடைய சண்டக்கோழி பட படப்பிடிப்பை கூட நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்திருக்கிறாராம்.

மேலும் செய்திகள்