பிரபுதேவா படத்துக்கு ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்? டைரக்டர் விளக்கம்

பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் பிரபுதேவா படத்துக்கு, ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியது ஏன்? என்பதற்கு அதன் டைரக்டர் கல்யாண் விளக்கம் அளித்தார்.

Update: 2018-01-08 23:45 GMT
 அவர் கூறியதாவது:–

‘‘எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படம், ஒரு பயண கதைதான். அதேபோல் பிரபுதேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படமும் பயண கதைதான். அதனால்தான் எங்கள் படத்துக்கு ‘குலேபகாவலி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். மற்றபடி, 2 படங்களுக்கும் தொடர்பு இல்லை.

பிரபுதேவா, ஹன்சிகா, முனீஸ்காந்த் ஆகிய மூவரும் ஒரு புதையலை தேடி செல்கிறார்கள். அதே புதையலை தேடி வில்லன்கள் ஆனந்தராஜ், மதுசூதனராவ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் அலைகிறார்கள். ரேவதி, ஒரு குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிறார். படத்தின் கலகலப்புக்கு யோகி பாபு இருக்கிறார்.

15 வருடங்களுக்கு முன் பார்த்த பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம். படத்தின் கதையை கேட்டதும், ஹன்சிகா நடிக்க சம்மதித்தார். படத்தில் அவர், ‘பப்’ டான்சராக வருகிறார். விவேக் மெர்வின் இசையமைத்து இருக்கிறார். ராஜேஷ் தயாரித்துள்ளார். கோவை, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.’’

மேலும் செய்திகள்