ஆபாச படம் எடுத்த டைரக்டர் ராம்கோபால் வர்மாவை கைது செய்யக்கோரி உண்ணாவிரதம்

மகளிர் சங்கத்தினரும், சமூக சேவை அமைப்பினரும் கண்டித்து வருகிறார்கள்.

Update: 2018-02-22 22:15 GMT
டைரக்டர் ராம்கோபால் வர்மா இயக்கி இணையதளத்தில் வெளியிட்ட ‘காட் செக்ஸ் ட்ரூத்’ ஆபாச படத்துக்கு எதிராக ஆந்திரா, தெலுங்கானாவில் போராட்டம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மனதை கெடுத்து வழிதவற செய்வதுபோல் அந்த படம் இருப்பதாகவும், பெண்களை இழிவுபடுத்தி உள்ளதாகவும் மகளிர் சங்கத்தினரும், சமூக சேவை அமைப்பினரும் கண்டித்து வருகிறார்கள்.

அவர் மீது போலீசிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ராம்கோபால் வர்மாவை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் பெண்கள் அமைப்பினர் ராம்கோபால் வர்மாவை கைது செய்யும்படி வற்புறுத்தி 48 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

இதில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் போலீசாரும் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்தார்கள். 504 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு ராம்கோபால் வர்மா நேரில் அழைக்கப்படுவார் என்றும் போலீஸ் கமிஷனர் யோகானந்த் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்