200 படங்களில் பணியாற்றிய சினிமா பட தொகுப்பாளர் சேகர் மரணம்

200 படங்களில் பணியாற்றிய சினிமா பட தொகுப்பாளர் சேகர் மரணமடைந்தார்.

Update: 2018-03-22 22:30 GMT
பிரபல சினிமா பட தொகுப்பாளர் சேகர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. இவர் மலையாள டைரக்டர்களான பாசில், சித்திக் ஆகியோருக்கு ஆஸ்தான பட தொகுப்பாளராக பணியாற்றினார். தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘தச்சோலி அம்பு’ படத்துக்கு பட தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிசாத்தான் படத்துக்கும் இவர்தான் பட தொகுப்பாளர். பூவே பூச்சூடவா, வருஷம் 16, காதலுக்கு மரியாதை உள்பட பல படங்களில் பணியாற்றி உள்ளார். வருஷம் 16 படத்துக்காக இவருக்கு தமிழக அரசின் சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிடைத்தது. ‘1 முதல் 0 வரை’ படத்துக்காக கேரள அரசின் விருதை பெற்றார். தமிழில் வந்த சாதுமிரண்டால் இவர் பணியாற்றிய கடைசி படம். 200 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

திருச்சி அருகே உள்ள தென்னூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சேகருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். சேகருக்கு சுந்தரி என்ற மனைவியும் தீபலட்சுமி, திலகவதி, நித்யா என்ற மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்