சினிமா செய்திகள்
ஆஸ்பத்திரியில் அனுமதி; நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தீவிர சிகிச்சை

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் தமிழில் ஆதி, நிக்கி கல்ராணியுடன் ‘யாகாவராயினும் நாகாக்க’ படத்தில் நடித்து இருந்தார். இந்தி, பெங்காலி, போஜ்புரி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு 70 வயது ஆகிறது. மிதுன் சக்ரவர்த்திக்கு ஊட்டியில் பங்களா வீடு மற்றும் ஓட்டல் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு சென்று ஓய்வு எடுப்பார்.

சில வருடங்களுகு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதுகு வலியாலும் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு மிதுன் சக்ரவர்த்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தி நடிகர்-நடிகைகள் பலர் மிதுன் சக்ரவர்த்தியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.