'ஆவேஷம்' ஓடிடி ரிலீஸ் - வெளியான தகவல்

'ஆவேஷம்' படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது

Update: 2024-04-26 01:47 GMT

image courtecy:instagram@fahadhfaasil_universe

சென்னை,

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார்.

தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்' . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 14 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆவேஷம் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில், இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்