காஜல் அகர்வால் நடித்துள்ள 'சத்யபாமா' படத்தின் முதல் பாடல் வைரல்

காஜல் அகர்வால் நடித்துள்ள 'சத்யபாமா' படம் அடுத்த மாதம் 17-ம் தேதி வெளியாகிறது.;

Update:2024-04-26 08:27 IST

image courtecy:twitter@MsKajalAggarwal

சென்னை,

2007-ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான 'லட்சுமி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'சந்தாமாமா' படத்தின் மூலம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான 'கருங்காப்பியம்' படத்தில் நடித்தார்.

அதற்கு அடுத்து தெலுங்கு படமான 'சத்யபாமா' படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 17-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்