சினிமா செய்திகள்
அதிக படங்களில் நயன்தாரா

நயன்தாரா ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்கள் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். எந்த நடிகையாலும் அவர் மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை.
சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வசூல் அள்ளின. மலையாளம், தெலுங்கிலும் வலுவாக இருக்கிறார். நயன்தாரா கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்களும் காத்து இருக்கிறார்கள்.

கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய 3 படங்கள் அவர் நடிப்பில் வெளியானது. இந்த வருடத்தில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் தெலுங்கில் ஜெய்சிம்ஹா ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார்.

கொலையுதிர் காலம் மற்றும் ராஜேஷ் இயக்கும் படங்கள் கைவசம் உள்ளன. ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கவும் பேசுகிறார்கள். மேலும் 2 படங்களில் நடிக்கவும் கதை சொல்லி உள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்து நடிக்கும் கதாநாயகியாக இருக்கிறார். பேயாக வந்த மாயா, காதுகேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், கலெக்டர் வேடம் ஏற்ற அறம், கஞ்சா விற்பவராக நடித்த கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் நயன்தாரவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின. சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.